4 மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டர் உபயோகித்தால்?
இன்று வேகமாக சென்று கொண்டிருக்கும் உலகில் அனைத்தும் கம்யூட்டர் மயமாகவே மாறிவிட்டது. அதிக நேரம் கம்யூட்டர் பயன்படுத்துவதால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
பிரச்சினைகள் என்ன?
நான்கு மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டரை தொடர்ந்து பயன்படுத்துவதால் கண் பாதிப்பு உள்ளிட்ட ஒரு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக கணினியை பயன்படுத்துபவர்கள், கண்பாதிப்பிலிருந்து தப்பிக்க மானிட்டரிலிருந்து 25 இன்ச் தொலைவில் வைத்து வேலை பார்க்க வேண்டுமாம்.
மேலும் கணினியை அதிகமாக பயன்படுத்துபவர்கள், இரண்டு அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஐந்து அல்லது 10 நிமிடங்கள் தூரமாக இருக்கும் பச்சை நிறத்தினை அவதானிக்க வேண்டும்.
கணினியை பயன்படுத்துவதை நாம் தவிர்க்க முடியாது என்றாலும், இதனை முறையாக பயன்படுத்தினால் அதிகமான அளவு பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம்.