குதிகால் வெடிப்பை மின்னல் வேகத்தில் குறைக்க இந்த ஒரு பொருள் போதும்! உடனடி மருத்துவம்
குதிகால் வெடிப்பு தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்.
முகத்தை போலவே கால்களை அழகாக வைத்திருக்க வேண்டும்.
இது ஆரோக்கியம் சார்ந்த விஷயமும் கூட.
ஒரு முறை குதிகால் வெடிப்பு பிரச்சினையை சந்தித்துவிட்டால் அதில் இருந்து மீள்வது கடினமான ஒன்று. இந்த வலியையும், வெடிப்பையும் சாதாரணமாக கடந்து செல்ல வேண்டாம்.
இதற்கான வைத்தியர் நம் சமயல் அறையில் உள்ளார். குதிகால் வெடிப்பு பிரச்சினையை குணப்படுத்த கடலைமாவு எப்படி உதவும் என்று பார்க்கலாம்.
கடலைமாவு
குதிகால் வெடிப்பு என்று சொன்னாலும் வெடிப்புக்குள் உள்பகுதியில் அழுக்குகள் படிந்து கறைபோன்று கருப்பாக இருக்கும்.
அவை கால் பாதங்களின் அழகை கெடுத்து காண்பிக்கும்.
இரவு நேரத்தில் கால்களை சுத்தமான நீரில் கழுவி குதிகால் வெடிப்பின் மீது ஃபேக் போடலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு - 3 டீஸ்பூன்
- கற்றாழை சாறு- 3 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை
மேலே கொடுக்கப்பட்ட மூன்றையும் சேர்த்து நன்றாக குழைத்து கொள்ளவும்.
இதை பாதங்கள் முழுவதும் நன்றாக தடவ வேண்டும்.
அவை நன்றாக காயும் வரை விட்டு மிதமான வெந்நீரில் தேய்த்து கழுவ வேண்டும்.
பிறகு சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது வைட்டமின் இ ஆயில் கொண்டு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
இவை பாதங்கள் வெடிப்பினை தடுத்து, வறட்சி அடையும் குறைக்கும்.