கணவரை உதறிவிட்டு சென்ற மனைவி! இன்ஸ்டாகிராமல் உயிரைவிட்ட சோகம்... நடந்தது என்ன?
திருமணமான 4 மாதத்தில் கணவரை விட்டுவிட்டு முன்னாள் காதலனுடன் சென்ற பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண்
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் வலசை கிராமத்தில் உள்ள பாலடைந்த கிணற்றில் பெண் சடலம் ஒன்றினை பொலிசார் கண்டெடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொலிசாரின் விசாரணையில், குறித்த பெண் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகள் வினோதினி(19) என்பதும், இவரை முன்னாள் காதலன் மனோ ரஞ்சித்(22) என்பவர் அடித்து கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளது அம்பலமாகியுள்ளது.
மனோ ரஞ்சித், வினோதினி இருவரும் காதலித்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு வேறொருவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்பும் இவர்களது பழக்கம் தொடர்ந்துள்ளது.
ஒரு கட்டத்தில் மனோ ரஞ்சித் விஷமருந்து தற்கொலை மேற்கொண்ட நிலையில், பின்பு கணவரை விட்டுவிட்டு வினோதினி ரஞ்சித்துடன் வந்துள்ளார்.
ஆனால் வந்த இடத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் வேறொரு ஆணுடன் வினோதினி பேசி வந்துள்ளார். இதனை பிடிக்காத மனோ ரஞ்சித் அவரை கண்டித்துள்ளார்.
இவர் கண்டித்தும் கண்டுகொள்ளாமல் இன்ஸ்டாகிராம் தொடர்ந்து பேசிவந்த நிலையில், சம்பவத்தன்று வினோதினியை ஆள் இல்லாத காட்டுப்பகுதிக்கு மனோ அழைத்துச் சென்று பேசியுள்ளார்.
அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வினோதியை அடித்துள்ளார். இதில் மயங்கிய வினோதினியை தனது நண்பர்கள் உதவியுடன் கிணற்றில் தூக்கி போட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |