Instagram Threads (இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ்) பயனர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சமூகவலைத்தளங்களை நேற்று முதல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பெயர் த்ரெட்ஸ், நேற்று அறிமுகமான ஒரே நாளில் பல சாதனைகளை படைத்திருக்கிறது.
டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் களமிறக்கியுள்ள புதிய செயலி தான் த்ரெட்ஸ்.
அறிமுகமான நாளிலேயே குறைந்த நேரத்தில் ஒரு கோடி பயனர்கள் இணைந்தனர்.
ஆனால் இதில் சிக்கல் ஒன்று இருக்கிறதாம், த்ரெட்ஸ் செயலியில் இணைந்தவர்கள் அதிலிருந்து வெளியேற முடியாமல் தவிப்பது பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே த்ரெட்ஸில் இணையலாம், இதில் இணைவது சுலபம் என்ற போதிலும் வெளியேறுவது சாத்தியமில்லாத ஒன்றாகும்.
சமூக ஊடகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களுக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில் வெளியேறிவிடலாம்.
ஆனால் அது த்ரெட்ஸில் நடக்கதாம், த்ரெட்ஸ் கணக்கை நீக்க வேண்டும் என்றாலும் இன்ஸ்டாகிராம் கணக்கையும் நீக்க வேண்டுமாம்.
இதை தற்காலிகமாக டீ ஆக்டிவேட் செய்யலாம் என்றாலும் வாரம் ஒருமுறை மட்டுமே செய்ய முடியுமாம்.
அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலியை டீ ஆக்டிவேட் செய்து விட்டால் த்ரெட்ஸ் கணக்கும் டீ ஆக்டிவேட் ஆகிவிடுமாம்.
இப்படி பல சிக்கல்கள் இருப்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |