சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி.. அடுத்து என்ன? பரபரப்பான கதைக்களத்துடன்
எதிர் நீச்சல் சீரியலில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட தர்ஷினியை தேடிச் சென்ற வீட்டுப் பெண்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எதிர் நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.
இதனால் உச்சத்தில் இருந்த சீரியல் தற்போது சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தியை களமிறக்கியுள்ளனர்.
குணசேகரன் மறைவிற்கு பின்பு இறங்கிய டிஆர்பி-யை ஏற்ற பல வழிகளில் சீரியல் குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.
தற்போது அந்த டிஆர்பி-யை கதிரை வைத்து பிரபல ரிவி அடைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கதிர் தனது அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளார்.
சிறையில் வீட்டுப் பெண்கள்
வீட்டில் கதிர் மட்டுமின்றி ஞானமும் அண்ணன் குணசேகரனை எதிர்த்து நின்றுள்ளார். தர்ஷியை மர்ம நபர்கள் கடத்திய நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்து எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
இந்நிலையில் தர்ஷினியை தேடிச் சென்ற குடும்ப பெண்களையும், ஜீவானந்தத்தையும் சேர்த்து வைத்து குணசேகரன், அவர்களை சிறையில் வைக்கும் அளவிற்கு காய் நகர்த்தியுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஐந்து பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |