Ethirneechal : ஜனனியின் தைரியத்தால் பலியாகப்போகும் பெண்கள்... குணசேகரன் சூழ்ச்சி
எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில் கடற்கரையில் குணசேகரன் தனது தம்பிகளுடன் நின்று கொண்டிருக்க, அப்போது ஒரு ரவுடி கும்பல் வருகிறது.
அந்த ரவுடி கும்பலிடம் நான் சொன்னபடி எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்து விட்டீர்களா? இதில் ஏதாவது மிஸ் ஆனது என்றால் உங்களை நான் சும்மா விட மாட்டேன் என மிரட்டுகிறார்.
அந்த ரவுடி கும்பலும், எல்லாத்தையும் சரியாக முடித்து விடுவோம் பக்காவாக பிளான் போட்டு இருக்கிறோம் என கூறுகின்றார்.

மறுபக்கம் கடை திறப்பு விழாவுக்கு காண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க அப்போது, கொற்றவை அங்கு வருகிறார். திறப்பு விழாவில் நிச்சயமாக குணசேகரன் ஏதாவது பிரச்சனை செய்வார்.
அதனால் நாம் போலீஸ் பாதுகாப்பு கேட்பது நல்லது என சொல்கிறாள். ஆனால், ஜனனி போலீஸ் பாதுகாப்பு எல்லாம் தேவையில்லை மேடம்.
முதல் நாளே போலீஸ் அங்கு இருந்தால், மக்கள் எப்படி வந்து நிம்மதியாக சாப்பிடுவார்கள். ஒரு விதமான பயம் ஏற்பட்டுவிடும். அதனால் எது நடக்கிறதோ நாங்களே அதை பார்த்துக் கொள்கிறோம் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என சொல்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கவலையோடு இருக்கும் சக்தி, தொடக்க விழாவை கெடுக்க அண்ணன் நிச்சயமாக பிரச்சனை செய்வார். எனக்கு ரொம்ப பயமா இருக்கு, தொடக்க விழாவை இன்னும் இரண்டு நாள் கழித்து தொடங்கலாம் என சொல்கிறான்.
அப்போது ஜனனி, நிச்சயம் அவர் ஏதாவது பிரச்சனை கொடுத்துக் கொண்டே தான் இருப்பார்.
அவருக்காக இனிமேல் நாம் பயந்து எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எது நடக்கிறதோ அதை நாம் ஒரு கை பார்த்து விடலாம் என சொல்கிறாள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |