ஈஸ்வரியை அசிங்கப்படுத்தும் தர்ஷா.. ஜனனி கேட்ட கேள்வி- தடுமாறும் குடும்பத்தினர்
ஈஸ்வரியை அவருடைய மகன்-தர்ஷா அசிங்கமாக வந்து வீட்டிலுள்ளவர்களிடம் கூறுகிறார்.
எதிர்நீச்சல்-2
ப்ரீஸ் டாஸ்கில் பிக்பாஸ் வைத்த Last Twist- நாளை வரவிருக்கும் “அந்த” இரு நபர்கள்- காத்திருக்கும் ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை எல்லாம் போலீசிடமும் நீதிமன்றத்திலும் கூறி விட்டனர். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பெண்கள் நால்வரும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். வீட்டின் சமையலறையில் மருமகள்களின் வாழ்க்கையை முடிக்க நினைத்த மாமியாரும் அடங்கி விட்டார்.
மருமகள்களின் செயலால் ஆத்திரமடைந்த ஞானமும், கதிரும் அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் பெயில் கிடைக்க 6 மாதம் போராடு வருகிறார்கள்.
அம்மாவை தவறாக பேசும் தர்ஷா
இந்த நிலையில் மகனை எப்படியாவது வெளியில் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்து நெஞ்சு வலி என படுத்து கொள்கிறார்.
அந்த சமயம், பார்த்து கதிர்- நந்தனிக்கு கோல் செய்து “வீட்டிலுள்ளவர்கள் அனைவரையும் உடனே அழைத்து கொண்டு வீட்டிற்கு வா..” என அழைக்கிறார்கள்.
அவர் கூறிய போது வெளியில் இருந்த அனைவரும் வீட்டிற்கு வருகிறாரகள். மாமியாரின் நிலையை தெரிந்து கொண்ட ஜனனி பக்கத்தில் அமர்ந்து பொறுமையாக,“அத்த உங்களுக்கு என்ன வேணும், நீங்க எனக்கு அம்மா மாதிரி, அதுனால எனக்கிட்ட சொல்லுங்க..” என கூறுகிறார்.
ஜனனி கேட்ட கேள்வியால் கடுப்பான குடும்பத்தினர்
கொஞ்சம் நேரம் தயங்கிய விசாலாட்சி,“ஈஸ்வரியை பார்க்கணும்..” என கூறுகிறார். இந்த சமயம் பார்த்து வீட்டில் ஒரு சலசலப்பு எழுந்துள்ளது. வீட்டிலுள்ளவர்கள் ஈஸ்வரியை அழைக்க தர்ஷாவை அனுப்புகிறார்கள்.
அம்மாவிடம் என்ன தகவல் கூறினார் என தெரியாமல் வீட்டில் வந்து அவருடைய அம்மாவையே தவறாக பேசுகிறார். இதனை ஜனனி கண்டித்து அனுப்பி வைக்கிறார்.
மாமியாரின் அழைப்பு ஏற்று ஈஸ்வரி மீண்டும் வீட்டிற்கு செல்வாரா? என்பதனை தொடர்ந்து வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய தினத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |