மீண்டும் கணவருடன் சேர்ந்த மருமகள்கள்.. தனித்து நிற்கும் இளம் ஜோடி- இனி நடக்கப்போவது என்ன?
நந்தினி- கதிர், ஞானம்- ரேனுகா ஆகிய இரண்டு தம்பதிகளுடன் இணைந்து குடும்பமாக வாழ ஆரம்பித்துள்ளனர்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.
குடும்பத்தில் அடிமையாக இருக்கும் பெண்கள், அவர்களை அடக்கி ஆழ நினைக்கும் ஆண் ஆதிக்கம் கொண்ட கணவர்கள் என்ற கருப்பொருளை வைத்தே கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தன்னுடைய அண்ணன் குணசேகரனுக்காக தம்பிகள் தங்களின் மனைவிகளை வெளியில் அனுப்பியுள்ளனர். மரியாதை இல்லாத இடத்தில் இனி வாழ முடியாது என அவர்களும் கோயிலில் சென்று அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களை வீட்டுக்குள் கொண்டு வர குணசேகரன் புது திட்டம் போட்டுள்ளார்.
அதாவது தன்னுடைய அம்மாவுக்கு விஷம் கொடுத்து அவரை படுத்த படுக்கையாக்கி, மருமகள்களின் நட்பை பிரிக்க நினைக்கிறார்.
கணவர்களுடன் சேர்ந்த மருமகள்கள்
இந்த நிலையில், மகனின் திருமணத்தை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்த குணசேகரன் புதிதாக குந்தவை என்ற பெண்ணை சக்தியின் வாழ்க்கைக்குள் கொண்டு வந்துள்ளார்.
இதனால் அவர்களுக்கு இருந்த காதல் பிளவுப்பட்டு, தற்போது காதல் இருந்தும் வெளிக்காட்ட முடியாமல் வேதனையுடன் இருக்கிறார்கள்.
இப்படியொரு சமயம் பார்த்து, நந்தினி- கதிர், ஞானம்- ரேனுகா ஆகிய இரண்டு தம்பதிகளும் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால் ஈஸ்வரியும் ஜனனியும் தங்களின் வாழ்க்கையை தொலைத்து தனியாக இருக்கிறார்கள்.
நந்தினியை காதல் வலையில் விழ செய்வதற்கு கதிர் மீண்டும் கழட்டிய தாலியை கட்டியுள்ளார். ஞானம் தங்க வளையல் வாங்கிக் கொடுத்து ரேனுகாவை மடக்கியுள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |