என்னை பகைச்சிக்கிட்டு யாரும் வாழ முடியாது! கோபத்தில் குணசேகரன்... எதிராக மாறிய குடும்பம்
எதிர் நீச்சல் சீரியலில் தர்ஷினி மர்ம நபர்களால் கடத்தப்பட்டமைக்கு ஜீவானந்தம் தான் காரணம் என்று குணசேகரன் சொல்கிறார்.
எதிர் நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. பெண்களின் அடிமைதனத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியலுக்கு பெண்கள் மட்டுமின்றி ஆண் ரசிகர்களும் கூட பெருமளவில் இருக்கின்றனர்.
பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார். இதன்பின்னர் சற்று பின்னடைவை சந்தித்த எதிர் நீச்சல் சீரியல் குறுகிய காலத்தில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.
தற்போது எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி காணாமல் போனதற்கு ஜீவானந்தம் தான் காரணம் என குணசேகரன் குறிப்பிடுகின்றார்.
ஈஸ்வரி, ஜனனி எல்லோரும் தான் காரணம் என புகார் கொடுக்கிறார். குணசேகரனுக்கு ஆதரவாக மாறி காவல் துறையினர், ஈஸ்வரி, ஜனனி, நந்தினி, ரேனுகா ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.
நீதிபதியிடம் பெண்களுக்கு எதிரான குற்றாச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஜீவானந்தம், ஈஸ்வரி எல்லோருக்கும் தீர்ப்பு எழுதுகிறார். தீர்பு குறித்து தெரியவில்லை.
மறு புறம் தர்ஷினி நடுக்காட்டுக்குள் எங்கே செல்வதென தெரியாது ஓடிக் கொண்டு இருக்கிறார். கடைசியில் ஈஸ்வரி தவிர மற்ற பெண்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |