Ethirneechal: சக்தி தேடும் தேவகி யார்? வெளியான சுவாரசிய தகவல்
எதிர்நீச்சல் சீரியலில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், இதனைக் குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து பல ரகசியங்கள் வெளியில் வராமல் இருந்து வருகின்றது.
வீட்டில் அடைபட்டுக்கிடந்த பெண்கள் தன்னை தோற்கடித்துவிட்டதால், உடனே தலைமறைவாகிவிட்டு தற்போது வீடு திரும்பியுள்ளார் குணசேகரன்.
தர்ஷன் பார்கவியை பிரிப்பதற்கு வீட்டிற்குள் அன்புக்கரசியும் நுழைந்துள்ள நிலையில், குணசேகரன் குறித்த கடிதம் ஒன்று சக்தியிடம் சிக்கியுள்ளது.
அதுமட்டுமின்றி குணசேகரன் தனது சொத்தை யாரு பெயருக்கும் மாற்றவில்லை என்ற உண்மையையும் அறிந்து கொண்ட சக்தி இதுகுறித்து குணசேகரனிடம் கேள்வியையும் எழுப்பினார்.

ஆதாரத்தை தேடும் சக்தி
சக்தி ஆதாரத்தை தேடிச் சென்ற நிலையில், அங்கு சில தகவல்கள் சக்திக்கு கிடைத்துள்ளது. அந்த பெண்ணின் பெயர் தேவகி என்பது தெரியவந்துள்ளது.
ஆட்களை அனுப்பி சக்தியை வேவு பார்க்க வைத்த குணசேகரன் தற்போது சக்தியை கொலை செய்துவிடுமாறு கூறியுள்ளார்.
மறுபுறம் ஜனனியும் அந்த காணொளியினை தேடி வருகின்றார். இந்நிலையில் தேவகி கதாபாத்திரத்தில் வருபவர் யார் என்ற உண்மை தற்போது வெளியே கசிந்துள்ளது.
குணசேகரனுக்கும் இந்த தேவகி என்பவருக்கு என்ன சம்பந்தம் என்பதை தெரிந்து கொள்வதற்கு அதிக ஆர்வமாக உள்ளனர்.
தற்போது சக்தி தேடும் தேவகி கதாபாத்திரத்தில் நடிப்பவர், எதிர்நீச்சல் தொடர்கின்றது என்பதில் நடித்து வரும் நடிகையின் நிஜமான தாய் என்று கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |