நடிகை கனிகா எதிர்நீச்சலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிப்பதற்கு நடிகை கனிகா வாங்கிய சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை கனிகா
தமிழ் சினிமாவில் 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கனிகா, பின்பு அதிகமான படங்களில் நடித்து பிரபலமானார்.
சேரன் நடித்த ஆட்டோகிராப், அஜித் நடித்த வரலாறு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த கனிகா, பின்னணி பாடகி, தொகுப்பாளினி என பல துறையிலும் கலக்கியவர் ஆவார்.

இவருக்கு திருமணம் ஆகி மகன் உள்ள நிலையில், தற்போதும் இளமையாகவே இருந்து வருகின்றார். தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.
இவரது மகன் தற்போது 10வது படித்துவருவதால், அவரை உடன் இருந்து கவனித்துக் கொள்வதற்கு எதிர்நீச்சல் சீரியலிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகின்றது.

ஈஸ்வரிக்கு சம்பளம்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரின் மனைவி ஈஸ்வரியாக நடிப்பதற்கு இவர் வாங்கியுள்ள சம்பளம் தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த சீரியலில் இவரது நடிப்பு வேறலெவல் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டியுள்ளார்.
இந்த சீரியலில் இவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போன்று தான் கதை செல்கின்றது. இன்னும் சில தினங்களில் இவருக்கு பதில் யார் வரப்போகின்றார் என்பது தெரியவரும்.

ஏனெனில் மருத்துவமனையில் இன்னும் சில தினங்களில் கண்விழித்துவிடுவார் என மருத்துவர்கள் கூறியதுடன், இவரது மருத்துவ செலவிற்கு 50 லட்சம் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் இப்பணத்தினை குணசேகரன் கொடுப்பதாக கூறிய நிலையில், தர்ஷினி இந்த பணத்தை வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்தும் வருகின்றார்.
தற்போது ஈஸ்வரியாக இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு சம்பளமான ரூ.15 முதல் 20 ஆயிரம் வரை வாங்கியதாக கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |