தர்ஷினியை நெருங்கும் ஈஸ்வரி.. தூக்கி வீசப்பட்ட சக்தி- இனி நடக்க போவது என்ன?
தர்ஷினியை நெருங்கும் சக்தியை ஆளை வைத்து அடித்து தூக்கியுள்ளனர்.
எதிர்நீச்சல்
விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கும் தொடர் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் தமிழ் சினிமாவிலுள்ள பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில், கரிகாலனை தர்ஷினிக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற முயற்சியில் குணசேகரன் இறங்கிய போது தர்ஷினி யாரும் எதிர்பாராத வகையில் கடத்தப்பட்டுள்ளார்.
குணசேகரன் இப்படி நடந்து கொள்வது வீட்டிலுள்ள யாருக்கும் பிடிக்கவில்லை. மாறாக குணசேகரனை நம்பி இனிமேலும் பயனில்லை எனக் கூறி விட்டு ஈஸ்வரியும் மற்ற மருமகள்களும் தர்ஷினியை தேடி சென்றுள்ளனர்.
ஆனால், ஈஸ்வரி தான் தன் மகளை கடத்தி வைத்து விட்டு நாடகம் போடுகிறார் என விசாலாட்சியும் குணசேகரனும் நினைத்து கொண்டு அமைதியாக வீட்டில் இருக்கிறார்கள்.
தூக்கி எறியப்பட்ட சக்தி
இந்த நிலையில், தர்ஷினியை யார் கடத்தினார்கள் என தெரிந்து கொள்ள முடியாத ஜனனி- சக்தி இருவரும் விசாரித்து ஓரளவு கண்டுபிடித்துள்ளனர்.
வீட்டில் அமர்ந்து கொண்டு,“ ஈஸ்வரி தான் தர்ஷினியை ஒளித்து வைத்து கொண்டு நாடகம் ஆடுகிறார்” என குணசேகரன் கதை பேசிக் கொண்டிருக்கிறார்.
இவர்கள் ஒரு புறம் தேடிக் கொண்டிருக்கையில் சக்தி வீதியை கடக்கும் போது விபத்திற்குள்ளாகிறார். இந்நிலையில் ரத்தக்காயத்துடன் ஜனனி மற்றும் மருமகள்கள் இணைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |