குணசேகரனுக்கு எதிராகும் தர்ஷினி.. பொங்கி எழும் கரிகாலன்.. செம டுவிஸ்ட்
கரிகாலனுக்கு தர்ஷினியை திருமணம் செய்ய போவதாக குணசேகரன் அதிரடி டுவிஸ்ட் கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் மிக விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் குணசேகரன் ஆதிரையை பழிவாங்குவதற்காக கரிகாலனுக்கு தர்ஷினியை திருமணம் செய்து வைக்கப் போவதாக கூறுகிறார்.
இதனால் ஈஸ்வரியுடன் சேர்த்து வீட்டிலுள்ள அனைவரும் ஷாக்காகியுள்ளனர். பாடசாலை சென்றுக் கொண்டிருக்கும் பிள்ளைக்கு இப்படி திருமணம் செய்து வைப்பதை யாரும் அனுமதிக்கவில்லை.
அதே நேரத்தில் ஆதிரை குணசேகரனுக்கு எதிராக கோர்ட்டுக்கு போக இருக்கும் நிலையில் ஈஸ்வரியும் கடும் கோபத்தில் இருக்கிறார்.
தர்ஷினி - கரிகாலன் திருமணம்
இந்த நிலையில் தர்ஷினியை பார்த்து, “ மொளச்சி மூணு இல விடல அதுக்குள்ள உனக்கு காதலா?” என்று குணசேகரன் கேட்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக " மொளச்சி மூணு இல விடாத பிள்ளைக்கு தான் நீங்க திருமணம் செய்ய போறீங்க..” என எதிர்த்து பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஆதிரையின் முடிவால் கடுப்பான கரிகாலன் குடித்து விட்டு வீட்டிற்குள் வந்து அலப்பறை செய்து கொண்டிருக்கிறார்.
இதனால் வீட்டில் உள்ளவர்கள் இன்னும் அதிகமாக கோபமாகி உள்ளனர். ஜான்சி ராணியும் மகனை பிடிக்க முடியாமல் ஓரமாக ஒதுங்கி வேடிக்கை பார்க்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கின்றது.
மேலும் தர்ஷினி - கரிகாலன் விடயத்தில் குணசேகரனுக்கு என்னென்ன வேலைகளை பார்க்க போகிறார் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |