பட்டம்மாளின் சொத்து யாருக்கு? ஒருவழியாக உண்மையை உடைத்த அப்பத்தா
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் அப்பத்தாவை கொலை செய்ய திட்டம் போடும் நிலையில், அப்பத்தா தனது சொத்தை குறித்து மருமகள்களிடம் பேசியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருக்கின்றது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. தற்போது வீட்டிற்குள் மாஸாக எண்ட்ரி கொடுத்த அப்பத்தா ஒரு கட்டத்தில் குணசேகரனை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.
அப்பத்தாவை கொலை செய்ய ஒருபுறம் குணசேகரன் திட்டம் தீட்டி வரும் நிலையில், மற்றொரு புறம் தனது சொத்து குறித்து மருமகள்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |