குணசேகரனால் பறிபோன உயிர்... வீணாய் போன ஜனனியின் முயற்சி! எதிர்நீச்சல் ப்ரொமோ
எதிர்நீச்சல் சீரியலில் பாட்டியை குணசேகரன் அறைக்குள் வைத்து பூட்டி வைத்துள்ள நிலையில், ஜீவானந்தம் நல்லவர் என்பதும் ஜனனிக்கு தெரியவந்துள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் 40 சதவீதம் ஷேர் தற்போது ஜீவானந்தத்திற்கு சென்றுள்ளது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு தெரியவந்துள்ளது. ஜனனி ஜீவானந்தத்தை தேடி அவர் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ள நிலையில், வீட்டில் அப்பத்தா கண்விழித்து ஜீவானந்தம் தனக்காகவே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
மேலும் அப்பத்தாவின் உயிரையும் ஜீவானந்தம் காப்பாற்றியது மட்டுமின்றி, அப்பத்தாவின் கொள்கையும், அவரின் கொள்கையும் ஒன்றாக இருந்ததாகவும், தன்னுடைய வீட்டிற்கு வந்த மருமகள்களுக்காக இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
குணசேகரனின் ஆட்கள் ஜீவானந்தத்தின் குடும்பத்தினை தாக்கிய போது ஜனனியும் அங்கு வந்து அவர்களை காப்பாற்றியுள்ளார். ஆனால் ஜீவானந்தத்தின் மனைவி இறந்தது போன்று ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
அதாவது ஜீவானந்தம் தனது மகளுடன் தனியாக நிற்பதும், ஜனனி நீங்க நல்லவர் தான் என்று கூறியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |