10 நிமிஷம் தான் டைம்... துப்பாக்கி முனையில் குணசேகரனை மிரட்டும் ஜீவானந்தம்
எதிர்நீச்சல் சீரியலில் வடிவுக்கரசி மற்றும் தேவயானி இருவரும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் விரும்பி பார்தது வருகின்றனர். பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக இருக்கும் இந்த சீரியல் மக்கள் மிகவும் பிரபலமாகி உள்ளது.
அதிலும் சமீபத்தில் கரிகாலன் ஆதிரையை திருமணம் செய்தது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்களுக்கு எதிராக வாய் திறக்காத மருமகள்கள் தற்போது தங்களது உரிமைக்காக எதிர்த்து நின்று தைரியமாக பேசி வருகின்றனர்.
ஜீவனந்தம் குணசேகரனின் வீட்டிற்கு வந்து பாட்டியின் கைரேகையை எடுத்து 40 சதவீதம் ஷேரை தனது பெயருக்கு மாற்றியுள்ளார்.
தற்போது குணசேகரன் மற்றும் ஜனனி ஒன்று சேர்ந்துள்ள நிலையில், ஜீவானந்தத்தை எதிர்க்கின்றனர். ஆனால் ஜீவானந்தம் தனது பாணியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி குணசேகரனுக்கு 10 நிமிடம் நேரம் கொடுத்துள்ளார். நாளைக்கான ப்ரொமோ இத்துடன் முடிவடைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |