Ethirneechal: எண்ட்ரியான ஜீவானந்தம்.. எஸ்கேப் ஆகிய கதிர்! பரபரப்பான ப்ரொமோ காட்சி
எதிர்நீச்சல் சீரியலில் வீடு இல்லாமல் நிற்கும் பெண்களுக்கு உதவி செய்ய ஜீவானந்தம் வருகின்றார். பணத்திற்காக கதிரை அனைவரும் தேடி வருகின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தொழிலில் சாதிக்க துடிக்கின்றனர். குணசேகரன் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
வாடகைக்கு சென்ற வீட்டிலிருந்தும் வீட்டின் உரிமையாளர் வெளியேற கூறியுள்ள நிலையில், உதவி செய்வதற்கு ஜீவானந்தம் களமிறங்குகின்றார்.

Super Singer: போட்டியாளர்களின் பாடலுக்கு நட்சத்திரங்களின் அசத்தல் நடனம்... தூள் பறக்கும் சூப்பர் சிங்கர் மேடை
திருமண செலவிற்காக வெளியே பணம் வாங்கியுள்ள குணசேகரன் அதனை திருப்பி கொடுப்பதற்கு கதிரை தேடுகின்றார். ஆனால் கதிர் எங்கும் தேடியும் கிடைக்காமல் எஸ்கேப் ஆகியுள்ளார். ஜோதிடரும் கதிரால் உங்கள் குடும்பத்திற்கு ஆபத்து என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |