Ethirneechal: கணவரை விவாகரத்து செய்யும் நந்தினி, ரேணுகா... ஜனனியை காப்பாற்றிய புதிய நபர் யார்?
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆட்களிடம் சிக்கிய ஜனனி தற்போது காப்பாற்றப்பட்டுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து தப்பித்து தற்போது ஜாமீனில் வீட்டுக்கு வந்துள்ளார். மற்றொரு புறம் தனது ஆட்களை வைத்து ஜனனியை கொலை செய்யவும் கூறியுள்ளார்.

இவர்களிடமிருந்து எஸ்கேப் ஆகிய ஜனனி மோட்டர் அறையில் மாட்டிக் கொண்ட நிலையில், அவரை ஒருவர் வந்து காப்பாற்றியுள்ளார்.
இவர் யாராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. அதாவது குறித்த சீரியலில் புதிய பிரபலம் ஒருவர் களமிறங்கியுள்ளார்.
ஆம் கோலங்கள் சீரியலில் நடித்து புகழ்பெற்ற பாஸ்கர் எண்ட்ரியாகியுள்ளார். ஜனனி தற்போது அவரிடம் உள்ள நிலையில், ஜனனியின் பிரச்சனையை என்னவென கேட்கவும் செய்கின்றார்.
பாஸ்கரின் புதிய எண்ட்ரி கதையின் போக்கை தலைகீழாக மாற்றுமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மற்றொரு புறம் ஜனனி, ரேணுகா இருவரும் கணவரை விவாகரத்து செய்வதாக ஊர் தலைவர்கள் முன்பு கையெழுத்து போடுவதற்கும் தயாராகியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |