Ethirneechal: மர்ம அறையில் இருந்த பெண் கலெக்டரா? அடுத்தடுத்து அரங்கேறும் திருப்பம்
எதிர்நீச்சல் சீரியலில் மர்ம அறையில் இருந்த பெண் யார் என்று தெரியவந்துள்ளதுடன், ஜனனியும் அங்கிருந்து தப்பிக்க பல முயற்சிகளை எடுத்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து ஜாமீன் கிடைத்து வீட்டிற்கு வந்து அனைவரையும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளார்.
விசாலாட்சியிடம் தனக்கு மனநிலை சரியில்லை என்று எழுதி கையெழுத்து வாங்க நினைத்த தருணத்தில் விசாலாட்சி கையெழுத்து போடமாட்டேன் என்று அதிரடி காட்டினார்.

சக்தி ஜனனி ஹோட்டலில் இறந்த பெண்ணின் கணவரிடம் உள்ள வீடியோவை வாங்க முயற்சித்து வருகின்றார். அவருக்கு தேவையான பணத்தை குணசேகரனிடம் வந்து கேட்கின்றார்.
மற்றொரு புறம் ஜனனி தேவசகாயம் பிடியில் இருந்த நிலையில், அங்கு அடைத்து வைக்கப்பட்ட பெண் யார் என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது ஜனனிக்கு உதவி செய்த கலெக்டரின் உறுப்பினை திருடவே தேவசகாயம் அவரை அங்கு வைத்திருந்தார்.
இந்நிலையில் ஜனனி, கலெக்டர் இருவரும் இணைந்து அங்கிருந்த நபர்களை அடித்துவிட்டு வெளியே வந்த போது, தேவசகாயத்திடம் மாட்டிக் கொள்கின்றனர்.
அவரிடம் சண்டையிட்டுள்ள நிலையில், தற்போது எவ்வாறு இருவரும் தப்பிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |