Ethirneechal: ஜனனி, சக்தி இடையே ஏற்படும் மனஸ்தாபம்! மீண்டும் சதியை ஆரம்பித்த அண்ணன்கள்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனிக்கு மீண்டும் ஹோட்டல் தொழில் வந்த நிலையில், இதனை சக்தி வேண்டாம் என்று தவிர்த்து ஜனனியை கஷ்டப்படுத்தியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
அவ்வப்போது பல திருப்பங்களை கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது.

ஈஸ்வரியை அடித்து மருத்துவமனையில் போட்டுள்ள குணசேகரன் கைது செய்யப்பட்டும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
விசாலாட்சி மகனின் சுயரூபத்தினை அறிந்து கொண்டு தற்போது மருமகள்களுக்கு முழு ஆதரவை கொடுத்து வருகின்றார்.
இதுவரை மனைவியை அடிமையாக வைத்திருந்த ஞானம், கதிர் தற்போது புதிய நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். இந்த மாற்றத்திற்கு காரணம் குணசேகரனின் சதி என ஜனனி யோசித்து வருகின்றார்.

சக்தி, ஜனனி மனஸ்தாபம்
ஹோட்டல் தொழில் நடத்திவரும் தம்பதி ஒருவர் ஜனனியைப் பார்க்க வந்து, தொழிலில் பார்ட்டனராக இருக்கலாம் என மீண்டும் ஹோட்டல் தொழிலுக்கு அழைத்துள்ளனர்.
ஆனால் சக்தி சற்றும் யோசிக்காமல் வேண்டாம் என கூறி அவர்களை அனுப்பியது ஜனனிக்கு சற்று மனஸ்தாபம் எழுந்துள்ளது.

இதனை பெரிதாக்கி தனது பக்கம் இழுத்துக் கொள்ள கதிர், ஞானம் முயற்சித்து வரும் நிலையில், ரேணுகா தக்க பதிலடி கொடுத்து அனுப்பியுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |