Ethirneechal: நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஜனனி.... தேவசகாயத்திடமிருந்து ஜனனி தப்பிப்பது எப்படி?
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனிக்கு தேவசகாயம் குறித்த உண்மை அனைத்தும் தெரிந்த நிலையில், தற்போது அவரிடமிருந்து எவ்வாறு தப்பிக்க போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து தப்பித்து ஜாமீன் கிடைத்து வீட்டிற்கு வந்த நிலையில் நந்தினி வைத்த நிபந்தனையால் கதிரின் விவாகரத்து பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது.

தற்போது ஜனனி தேவசகாயத்தினைக் குறித்த உண்மை அனைத்தும் தெரிந்த நிலையில், அவரிடமிருந்து தப்பிக்க என்ன செய்வார் என்பது தெரியாமல் உள்ளது.
ரகசிய அறையில் இருக்கும் பெண்ணின் உடல் உறுப்புகளை எடுக்கும் வேலையை ஆரம்பிக்க ஆட்கள் வந்த நிலையில், ஜனனி மயங்கிய நிலையில் இருக்குமாறு நடிப்பதையும் தேவசகாயம் கண்டுபிடித்துள்ளார்.
மேலும் ஜனனியின் உடல் உறுப்புக்களையும் எடுப்பதற்கு நாட்களை முடிவு செய்துள்ள நிலையில், ஜனனி நடக்க முடியாத அளவிற்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர அரக்கனிடமிருந்து ஜனனி எவ்வாறு தப்பிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |