Ethirneechal: பிரியாணியில் போடப்பட்ட கரப்பான்பூச்சி... ஆனால் கடைசியில் நடந்த டுவிஸ்ட்
எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி செய்து அனுப்பிய பிரியாணியில் அறிவுக்கரசி கரப்பான்பூச்சியை கலந்து விட்ட நிலையில், உணவுதுறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
குணசேகரன் கொடுத்த குடைச்சல்களை தகர்த்து எரிந்து வீட்டு பெண்கள், தற்போது வெற்றிகரமாக ஹோட்டலை நடத்தி வருகின்றனர்.

தற்போது அறிவுக்கரசியை வைத்து தனது திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர். அதாவது விசாலாட்சி பிரியாணி நன்றாக செய்யும் நிலையில், அன்றைய தினம் ஹோட்டலுக்கு பிரியாணி செய்து அனுப்பியுள்ளார்.
ஆனால் குறித்த பிரியாணியில் அறிவுக்கரசி கரப்பான் பூச்சியைக் கலந்துள்ள நிலையில், இதனை ஜனனி எவ்வாறு முறியடித்தார் என்பது தெரியாமல் அறிவு தவிக்கின்றார்.
ஜனனி தனது கூட்டணியுடன் சேர்ந்து சீக்கிரமாக பிரியாணியை விற்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |