Ethirneechal: மீண்டும் தேவசகாயம் இடத்திற்கு சென்ற ஜனனி... காத்திருந்த பேரதிர்ச்சி
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கலெக்டர் இருவரும் ஒருவழியாக தப்பித்த நிலையில், மீண்டும் தேவசகாயத்தினை பார்க்க அவரது இடத்திற்கு சென்றுள்ளனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் ஜாமீனில் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், அவரிடமிருந்தே பணம் வாங்கி ஜனனி குற்றம் இல்லாதவர் என்பதை சக்தி நிரூபித்துள்ளார்.

மேலும் ஜனனி கலெக்டர் இருவரும் தேவசகாயத்திடம் இருந்து தப்பித்துள்ள நிலையில், மீண்டும் போலிசாரை அழைத்துக் கொண்டு அங்கு சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு தேவசகாயம் இருந்த அடையாளம் இல்லாமல், வேறொரு ஆள் இருப்பதாக செட்டப் செய்யப்பட்டுள்ளது. இதில் தேவசகாயம் மட்டுமின்றி அவருக்கு பின்னே மிகப்பெரிய ஆள் பலம் உள்ளது என ஜனனி யோசிக்கிறார்.
வீட்டில் உள்ள மற்ற பெண்கள் ஜனனி கிடைத்ததையும், அவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ததையும் நினைத்து மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |