அப்பத்தாவை கொலை செய்ய குணசேகரன் போட்ட திட்டம்.. அடுத்து நிகழப்போவது என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் அப்பத்தாவிடம் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், அப்பத்தாவை கொலை செய்வதற்கு திட்டம் போட்டுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருக்கின்றது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. தற்போது வீட்டிற்குள் மாஸாக எண்ட்ரி கொடுத்த அப்பத்தா ஒரு கட்டத்தில் குணசேகரனை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.
ஏற்கனவே கொலை வெறியில் இருக்கும் குணசேகரன் அப்பத்தாவை தீர்த்து கட்டுவதற்கு முடிவு செய்துள்ளார். அடுத்தடுத்து மிகவும் வித்தியாசமான கதைகளத்துடன் செல்லும் இந்த சீரியலில் இனி என்னன கநடக்க இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.