Ethirneechal: கெத்தாக வீட்டிற்குள் வந்த குணசேகரன்... அடுத்து நடக்கப் போவது என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மீது போடப்பட்ட குண்டாஸ் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது வீட்டிற்குள் மாஸ் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து தப்பித்து தற்போது ஜாமீன் வாங்கியுள்ள நிலையில், ஜனனியுடன் வேலை செய்த அமுதா கொலை வழக்கில் ஜனனி போலிசாரிடம் சிக்கியுள்ளார்.

போலிசாரிடமிருந்து எஸ்கேப் ஆகிய ஜனனி குணசேகரன் ஆட்களிடம் மாட்டிக் கொண்ட நிலையில், அவரை கொலை செய்வதற்கும் துணிந்துள்ளனர்.
இதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டு இருக்கும் ஜனனி இவர்களிடமிருந்து தப்பிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வீட்டு பெண்களுக்கு ஆதரவாக மாமியார் விசாலாட்சி இருந்து வரும் நிலையில், குணசேகரன் அடுத்து என்ன செய்யப்போகின்றார்? அவரது ஆதாரம் வீட்டு பெண்களிடம் சிக்குமா? என்று பல கேள்விகள் எழுகின்றது.