வீட்டை விட்டு வெளியேறும் தர்ஷன்- பார்கவி- அன்புக்கரசியின் அடுத்த பிளான் என்ன தெரியுமா?
வீட்டில் அன்புக்கரசியால் அடுத்தடுத்து பிரச்சினை வெடித்துக் கொண்டிருப்பதால் தர்ஷன்- பார்கவி இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்ற ஜனனி திட்டம் போடுகிறார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக கவர்ந்து வருகின்றது.
வீட்டிற்கு வாழ வந்த பெண்களை அடக்கி ஆழ நினைத்த குணசேகரன் அதற்காக பல வேலைபாடுகளை செய்து வந்தார். அவருக்கு அவரின் தம்பிகளும் அம்மாவும் துணையாக இருக்கிறார்கள்.
ஒரு சமயத்தில் மருமகள்களை அடக்க முடியாத குணசேகரன் மனமுடைந்த வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், தற்போது பொங்கி எழுது அடுத்தடுத்து புதுபுது திருப்பங்களை கொடுத்து வருகிறார்.
மற்றொரு புறம் ஜனனி குணசேகரன் கொடுத்த கெடு முடிவதற்குள் வீடியோ ஆதாரத்தினைக் கைப்பற்ற வேண்டும் என்ற வேலையினை பார்த்து வருகின்றார். மாடியில் வீட்டு பெண்கள் அனைவரும் இருந்து திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஜனனி பேசியதை கரிகாலன் கேட்டு விடுகிறார்.

அதனை குணசேகரனிடம் கேட்க ஓடிய பொழுது தலையில் அடிப்பட்டு ஆதிரையை பற்றிய ஞாபகங்கள் வந்து விடுகிறது.
வீட்டை விட்டு வெளியேறும் புதுமண தம்பதி
இந்த நிலையில், பெண்களை திசைத்திருப்புவதற்காக வீட்டுக்குள் வரவழைக்கப்பட்ட அன்புக்கரசி எப்படியாவது பார்கவியை பிரித்து விடலாம் என திட்டங்களை போட்டு வருகிறார்.

கடைசியாக தர்ஷன் பற்றி என்னிடம் தெரிந்து கொள் என பார்கவியிடம் கூற, அப்போது பார்கவிக்கு கோபம் வந்து விடுகிறது. இதற்கெல்லாம் முடிவுக்கட்ட நினைக்கும் ஜனனி, புதிதாக திருமணமான தம்பதிகளை பெங்களூருக்கு அனுப்ப திட்டம் போடுகிறார்.
இதனை கரிகாலன் அன்புக்கரசியிடம் கூற அதற்கு குணசேகரன் என்ன செய்யப்போகிறார் என்பதை இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |