கண்விழித்த அப்பத்தா... ஆட்டத்தை ஆரம்பித்த குணசேகரன்! பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரொமோ
எதிர்நீச்சல் சீரியல் நியூயார்க்கில் ஒளிபரப்பட்ட நிலையில், இதனை ஃபர்ஹானா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் 40 சதவீதம் ஷேர் தற்போது ஜீவானந்தத்திற்கு சென்றுள்ளது.
ஜீவானந்தத்திடமிருந்து சொத்தை மீட்க வீட்டில் உள்ள பெண்கள் முயற்சித்து வருகின்றனர். தற்போது ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு தெரியவந்துள்ளது.
ஜனனி ஜீவானந்தத்தை தேடி அவர் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ள நிலையில், வீட்டில் அப்பத்தா கண்விழித்துள்ளார். அப்பத்தாவை குணசேகரன் சரமாரியாக திட்டி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |