காணாமல் போன அப்பத்தா... குணசேகரனின் நாடகமா இது? கொதிக்கும் குடும்பத்தினர்
எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவை குணசேகரன் அடைத்து வைத்துள்ள நிலையில், தற்போது காணவில்லை என்று சீன் போட்டு வரும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் 40 சதவீதம் ஷேர் தற்போது ஜீவானந்தத்திற்கு சென்றுள்ளது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு தெரியவந்துள்ளது. ஜனனி ஜீவானந்தத்தை தேடி அவர் இருக்கும் இடத்திற்கு சென்ற போது ஜீவானந்தத்தின் மனைவியை குணசேரகன் ஆட்கள் கொலை செய்துவிட்டனர்.
இதனை கண்முன் அவதானித்த ஜனனி ஜீவானந்தம் நல்லவர் என்பதை புரிந்து கொண்டார். தற்போது வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட அப்பத்தாவை காணவில்லை என்று குணசேரகன் கதை கட்டி விட்டு வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |