Photo album: எதிர்நீச்சல் சீரியல் கனிகாவா இது? திருமணத்தில் எப்படி இருக்காரு பாருங்க
எதிர்நீச்சல் சீரியல் நடிகை கன்னிகாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை கனிகா
தமிழ் சினிமாவில் சுசி கணேசன் இயக்கிய “5 ஸ்டார்” என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை கனிகா.
இவர், முதல் படத்திற்கு பின்னர் படிப்பில் ஆர்வம் காட்டி வந்தார். இதனால் சில முக்கிய படங்கள் இவர் கை விட்டு சென்றுள்ளது.
படிப்பை முடித்த பின்னர், சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் நடிகர் அஜித்தின் வரலாறு போன்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த இரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
திருமணம்
இதற்கிடையில், கடந்த 2008ம் ஆண்டு ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். மகனுக்கு ஏற்பட்ட சில உடல்நல பிரச்சினைகள் காரணமாக சினிமாவில் இருந்து நீண்ட காலம் விலகியிருந்தார்.
அதன் பின்னர். சின்னத்திரையில் திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஈஸ்வரியாக ரீ- என்றிக் கொடுத்தார். எதிர்நீச்சல் சீரியலுக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது. இதனால் முகம் பாகத்தை வெற்றிகரமாக முடித்த இரண்டாம் பாகத்தை ஆரம்பித்து, அதுவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
பெண்களின் அடிமைத்தனம் இனி இருக்கக் கூடாது என்ற கருவுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் இருந்து கனிகா விலகப்போவதாக செய்திகள் வெளியாகின. அதற்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
திருமணம் படங்கள்
கனிகாவுக்கு விலங்குகள் அதிகமாக பிடிக்கும் என்பதால் நாய்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பேசிக் காணொளிகளை பகிர்ந்து வருகிறார். இதனால் இவர் பற்றிய செய்திகள் அதிகமாக வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், கனிகாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “திருமணத்தில் அழகாக இருக்கீங்க..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |