Ethirneechal: ஜனனிக்கு வார்னிங் கொடுத்த சக்தி.... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனிக்கு சக்தி வார்னிங் கொடுக்கும் ப்ரொமோ காட்சி வெளியாகி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், குறித்த சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.
மாமியாருக்காக வீட்டிற்கு வந்த மருமகள்கள் அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். தற்போது சக்தி ஜனனிக்கு முற்றிலும் எதிராக நடந்து கொள்கின்றார்.
தற்போது ஜனனியை எச்சரிக்கவும் செய்துள்ளார். ஜனனி சக்தியின் பேச்சை பொறுத்துக் கொள்வாரா அல்லது வீட்டை விட்டு கிளம்பிவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |