ஜீவானந்தனுக்கும் அப்பத்தாவிற்கும் இருக்கும் தொடர்பு என்ன? இறுதியில் கொல்லப்பட்டது யார்? விறு விறுப்பான கதைக்களம் இன்று...
இன்று எதிர்நீச்சல் சீரியலில் பல பரபரப்பான சம்பவங்களுடன் கதைக்களம் தொடர்வது ப்ரோமாவாக வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கனிகா, மாரிமுத்து, சத்தியப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, என ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் அனைவரின் நடிப்பு கொஞ்சம் வெகுளியாகவும் கொஞ்சம் கொஞ்சலாகவும் நகைச்சுவையாகவும் மிரட்டலாகவும் நடித்து சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
குணசேகரனிடம் பேசிய அப்பத்தா..
குணசேகரனின் சொத்துக்கள் ஜீவானந்தம் கைக்குப்போனதால் கோபத்தில் கொத்தளித்து இருக்கும் குணசேகரன் அப்பத்தா எப்போது கோமாவில் இருந்து வெளியில் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், அப்பத்தா ஒரு பக்கம் விழித்துக் கொள்ள மறுபக்கம் ஜீவானந்தனை பலி தீர்க்க கதிரும் ஜீவானந்தனை சந்திக்க ஜனனியும் சென்றிருக்கிறார்கள்.
ஆனால் அங்கு ஜீவானந்தம் கொல்லப்படுவரா? அப்பத்தாவிற்கும் ஜீவானந்தனுக்கும் என்ன தொடர்பு என்பதை இன்றைய சீரியலில் அறிந்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |