எதிர்நீச்சல் ஜனனிக்கு இப்படியொரு தம்பி இருக்கா.. இவர் எங்குள்ளவர் தெரியுமா?
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனிக்கு தம்பியாக வரும் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் சத்யப்ரியா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் அனைவருக்கும் ஆட்டம் காண்பிக்கும் சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் நடித்து வருகிறார்.
மேலும் ஆணாதிக்கம் மிக்க அண்ணன் – தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் நடத்துகிறார்கள் என்பதையும் கனவுகளை தொலைத்த அவர்கள் அதிலிருந்து எப்படி மீண்டெழுகிறார்கள் என்பதையும் இந்த சீரியல் அழகாக எடுத்து காட்டுகின்றது.
புதிய வில்லன்
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலுக்கு உயிர் கொடுத்த மாரிமுத்து கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவரின் இழப்பிற்கு பின்னர் கதை சற்று சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது. ஆனால் இதனை எப்படி மீண்டெழு வைப்பார்கள் என ரசிகர்கள் பயந்த போது புதிதாக இன்னொரு வில்லன் களமிறங்கியிருக்கின்றார்.
இவர் என்றி கொடுத்த முதல் நாளே நெற்றியில் திருநீறு, வெள்ளை வேஷ்டி சட்டை, தோளில் ஒரு பேக் என பவ்யமாக இருந்தாலும் நடத்தையில் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.
யார் இவர்?
அந்த வகையில், ஜனனிக்கு தம்பியாக வரும் இவர் இலங்கை மட்டக்களப்பு என்ற பகுதியை சேர்ந்தவர் நடிகர், இயக்குநர், தொகுப்பாளர் என வலம் வரும் ஆர்ஜே நெலு, இலங்கையில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றில் முதல்முறையாக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து ஜிபிஎஸ், கடலாய் காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். கிருஷ்ணப்ப சுவாமி மெய்யப்பன் கிருஷ்ணாவாக களமிறங்கி இன்னும் என்னென்ன செய்ய போகிறார் என்பதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
அத்துடன் இலங்கையின் மக்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நெலுவிற்கு குவிந்த வண்ணம் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |