G-mail வழங்கியுள்ள புதிய வசதி: ஆனால் இவர்கள் மட்டும் தான் பயன்படுத்தலாம்!
தனியுரிமையை மேம்படுத்துதல் மற்றும் மின்னஞ்சல் விநியோகங்களை பாதுகாத்தல் ஆகிய காரணங்களுக்காக, கூகுள் இணையத்தில் ஜி-மெயில் புதிய சேவையை கொண்டு வரப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
புதிய சேவை
ஜி-மெயிலில் விரைவில் ‘எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்’ (end-to-end encryption) வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான ஜி-மெயில் பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (end-to-end encryption) வசதி தகவல்களை பாதுகாப்பாக வைக்கும்.
தகவல் அனுப்புநர், பெறுநர் இடத்தில் மட்டும் இருக்கும். அனுப்புநரால் என்க்ரிப்ட் செய்யப்படுவதை மட்டும் உறுதி செய்யும். எந்த ஒரு மூன்றாம் தரப்பு நபரும், ஏன் கூகுளால் கூட தகவல், செய்திகளை டிக்ரிப்ட் செய்யவோ அல்லது படிக்கவோ முடியாது.
தனிப்பட்ட பயனர்களுக்கு இல்லை
தற்போது அலுவலகம், கல்வி பயன்பாடு கணக்குகளுக்கு மட்டுமே என்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது. விரைவில் தனிப்பட்ட பயனர் கணக்குகளுக்கும் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளையன்ட் சைடு என்க்ரிப்ஷன் (client-side encryption) ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கும் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.