காலை வெறும் வயிற்றில் 1 பௌல் பப்பாளி சாப்பிடுங்க! ஏகப்பட்ட நன்மையை பெறுவீங்க
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பழங்களில் ஒன்றான பப்பாளி பழத்தை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
பப்பாளி
ஆண்டு முழுவதும் விலை மலிவாக கிடைக்கக்கூடிய பழம் பப்பாளி தான். ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும் இதன் நிறம் கண்ணைக் கவருவதுடன், சுவையும் தனித்தன்மையைக் கொண்டுள்ளது.
பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே, நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. முக்கியமாக இதில் கலோரி மிகவும் குறைவு.
இப்படிப்பட்ட பப்பாளிப் பழத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அந்த நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
வெறும்வயிற்றில் பப்பாளி
உடல் எடை, வயிற்றை சுற்றியுள்ள தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள் பப்பாளியை தினசரி டயட்டில் எடுத்துக் கொள்ளலாம். காலை வெறும் வயிற்றில் ஒரு பௌல் உட்கொண்டால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் பசியைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைக்கின்றது.
Image Source : FREEPIK
பப்பாளியில் உள்ள பொட்டாசியம் இதய தொடர்பான பிரச்சனையை தடுப்பதுடன், கொலஸ்ட்ரால் அளவை சீராக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் செய்கின்றது. இதன் விளைவாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதுடன், ரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்துக்கொள்கின்றது.
image: iStock.com/awayge
பொலிவான சருமத்தை பெறுவதற்கு தினமும் பப்பாளி சாப்பிடலாம். இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இறந்த செல்களை நீக்க உதவுவதுடன், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கின்றது. தினமும் காலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் குடல் ஆரோக்கியம் மேம்பட்டு, செரிமான பிரச்சரனையையும் தடுக்கின்றது.
மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பப்பாளி ஒரு சிறந்த பழமாகும். நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கலை நீக்குவதுடன், செரிமான பிரச்சனையையும் தடுக்கின்றது.
image: Photo: PTP034/Shutterstock
பப்பாளியில் லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கவும், ஜனேற்ற அழுத்தத்தை குறைக்கவும், பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவி செய்கின்றது. அதாவது மாதவிடாய் சுழற்றியை சீராக்குவதுடன், மாதவிடாய் பிடிப்புகளைக் குறைக்கவும் செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |