Technology: எலான் மஸ்க்கின் Starlink இணைய சேவை இந்தியாவில் உரிமம் பெற்றது! விசேட அம்சங்கள் என்ன?
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸுக்குச் சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க், இந்தியாவில் செயல்பாட்டு உரிமைகளை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது.
அதன் பிரகாரம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் நிறுவப்பட்ட ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை, இந்தியாவில் விரைவில் ஆரம்பமானவுள்ளது.
இந்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) தற்போது இதற்கான அனுமதியை வழங்கியுள்ள நிலையில், 2025 முடிவிலோ அல்லது 2026ஆம் ஆண்டு ஆரம்பத்திலோ குறித்த இணைய சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார்லிங்கின் விசேட அம்சங்கள்
இணைய வேகமானது 25 Mbps முதல் 220 Mbps வரை, வானிலை மற்றும் இடவசதி சார்ந்த வேறுபாடுகள் இருக்கும்.
செயற்கைக்கோள்கள் மூலம் நேரடி இணையம், கேபிள்கள் அல்லது டவர் தேவையில்லை.
வீடியோ காலிங், ஓன்லைன் வகுப்புகள், OTT ஸ்ட்ரீமிங், கேமிங் போன்றவற்றிற்கு சிறந்தது. ஹார்ட்வேர் கிட் (செயற்கைக்கோள் டிஷ் + ரவுட்டர்): ரூ.33,000 வரை.
மாத சராசரி கட்டணம்: ரூ.3,000 (வரம்பற்ற இணையம்). தொடக்க சலுகையாக ஒரு மாத இலவச ட்ரயல் வாய்ப்பு.
ரூ.840 மாத திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த சேவையானது நடைமுறைக்கு வந்தால், இணைய வசதி இல்லாத அல்லது குறைவாக காணப்படும் கிராமங்களிலும் இணைய சேவையை வழங்குவதில், ஸ்டார்லிங் பாரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |