வாடகை செலுத்தாத எலான் மஸ்க்: தொடரப்பட்டுள்ள வழக்கு!
டுவிட்டர் நிறுவன அலுவலகத்திற்கு இன்னும் வாடகை செலுத்தாத காரணத்தால் மீண்டும் புதிய சர்ச்சையொன்று கிளம்பியுள்ளது.
டுவிட்டர் நிறுவனம்
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை உலகம் முழுவதும் கோடிக்கணக்காண மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார் என்பது நாம் அறிந்ததே.
அந்நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்து பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து இவரின் பெயர் அடிப்பட்டு வந்தது.
செலுத்தாத வாடகை
அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் கொலம்பியா ரெய்ட் என்னும் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் 30 ஆவது தளத்தில் டுவிட்டர் தலைமை அலுவலகம் இயங்கி வருகின்றது.
இந்த அலுவலகத்திற்கான வாடகை இன்னும் செலுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்நிறுவனத்திற்கு கடந்த டிசம்பர் 16ஆம் திகதி அறிக்கை கடிதம் ஒன்று அனுப்பியிருந்தது. இந்நிறுவனத்திற்கு வாடகைத் தொகையாக 1,36,250 அமெரிக்க டொலரை 5 நாட்களுக்கு செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
இந்த வாடகைத் தொகையானது இந்திய மதிப்பின் படி 1.12 கோடி ஆகும். குறித்த வாடகைத் தொகையை வழங்காததால் சான் பிரான்சிஸ்கோ மாநில நீதிமன்றத்தில் டுவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.