பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொட்டியில் தவறி விழுந்த யானைக்குட்டி!
பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொட்டியில் தவறி விழுந்த யானையின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தொட்டியில் தவறி விழுந்த யானை
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும்.
குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன. குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
அதேபோல், தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
கிப்பன் காப்பக வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த யானைக்குட்டி ஒன்று பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொட்டியில் தவறி விழுந்தது. 2 மணி நேரத்துக்கும் மேலாக அந்த யானையால் வெளியே வர முடியாமல் பரிதவித்தது. சுமார் 3 மணி நேரம் போராடி வனக் காவலர்கள் அந்த யானையை வெளியே மீட்டனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
A elephant calf which came out of the Gibbon Reserve Forest, fell into the tank which is use to prepare pesticide and weedicide for the garden. After more than couple of hours, the forest guards safely rescued the animal.#assam #elephant #viralvideo pic.twitter.com/HPoSS6V6vf
— News18 (@CNNnews18) June 26, 2023