நீ எனக்கு தான் சொந்தம்... - பாகனிடம் யானை செய்த செயல் - நெகிழ்ந்து போன நெட்டிசன்கள்
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும். குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன. குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
அதேபோல், தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பகவான் ஒருவன் வளர்த்த யானையை விட்டுவிட்டு வேறொரு யானை மீது ஏறினான். இதைப் பார்த்ததும் வளர்ப்பு யானை ஓடி வந்து எப்படி, அந்த யானை மீது ஏறுவ.. நீ எனக்குதான் சொந்தம் என்று கூறியது போல் அந்த யானை மீது ஏறிய பகவானை இறக்கும் வரை குழந்தைப் போல் அடம் பிடித்தது.
யானையின் அடம் தாங்க முடியாமல் பாகவன் வேறொரு யானை மீதிருந்து இறங்கி, வளர்ப்பு யானையிடம் வந்து தன் அன்பை பரிமாறினான்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நெகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
A very jealous elephant. ? pic.twitter.com/vlTBIeRT9E
— Jaz?️?? (@Jazzie654) June 24, 2023