நடத்துனரின் சாதூர்யத்தால் யானையிடமிருந்து உயிர் தப்பிய பயணிகள் - வைரலாகும் வீடியோ
நடத்துனரின் சாதூர்யத்தால் யானையிடமிருந்து உயிர் தப்பிய பயணிகளின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
யானையிடமிருந்து உயிர் தப்பிய பயணிகள்
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும். குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன.
குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன. அதேபோல், தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
சுற்றுலாப் பயணிகளை ஏற்றுக்கொண்டு வேன் ஒன்று காட்டுப் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று சாலையில் வந்த பெரிய யானை ஒன்று அந்த வேனை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.
உடனே, முன் வரிசையில் உட்கார்ந்துக் கொண்டிருந்த நடத்துனர் அந்த யானைக்கு பழத்தை கொடுத்தார். அதை தூக்கிப்போட்ட அந்த யானை நடத்துனரை தும்பிக்கையால் பிடிக்க முற்பட்டது. உடனே சுதாரித்துக் கொண்ட நடத்துனர், பின்புறம் சென்று பழ பையை எடுத்தார். அதற்குள் அந்த யானை பயணிகள் இருக்கைக்குச் சென்றது.
இதனால், பயந்து போன பயணிகள் அலறத் தொடங்கினர். உடனே நடத்துனர் அந்த பழப் பையை யானையிடம் கொடுத்தபோது, அதிலிருந்த ஒரு பழம் கீழே விழ, யானை கண் இமைக்கும் நேரத்தில் ஓட்டுநர் வேலை மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
"Corrupted Elephants of Srilanka" Can you guess where did they learn to get bribes from vehicles passing through their area? pic.twitter.com/mopUukRxjb
— Kapilan Sachchithananthan (@iamkapilan) June 12, 2023