ஆற்றில் யானை தும்பிக்கையை கடித்த ராட்சத முதலை - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
ஆற்றில் யானை தும்பிக்கையை கடித்த ராட்சத முதலையின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
யானை தும்பிக்கையை கடித்த ராட்சத முதலை
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும். குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன.
குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன. அதேபோல் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், யானை கூட்டம் ஒன்று ஆற்றில் தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று ராட்சத முதலை யானையின் தும்பிக்கை பிடித்து கடித்ததும். வலி தாங்க முடியாத யானை, முதலையிடம் தப்பிக்க போராடியது. அப்போது, யானை முதலையை தன் தும்பிக்கையால் தூக்கி அடித்தது. அப்போது முதலை தண்ணீருக்குள் மூழ்கி சென்றது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Giant crocodile bites elephant's trunk while drinking from the river. pic.twitter.com/KJzwMj3Env
— The Dark Side Of Nature (@darksidenatures) May 28, 2023