18 பேரை கொன்ற அரி கொம்பன் யானை - மீண்டும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்!
தேனி மாவட்டம் கம்பம் குடியிருப்பு பகுதியில் அரிக்கொம்பன் காட்டு யானை புகுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேனியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானை
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னகனாலில் இருந்து பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு இடம் பெயர்ந்த அரி கொம்பன் என்ற யானை தற்போது தமிழகத்தின் கம்பம் நகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
அரி கொம்பன் யானை தேனியில் உள்ள வாகனங்களை சேதப்படுத்தி ஒருவரை தாக்கியுள்ளது. காட்டுயானை உரசியதில், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தனர்.
மேலும் அரி கொம்பன் யானை தாக்கியத்தில் ஒருவர் பலத்த படுகாயம் அடைந்துள்ளார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கெனவே, இந்த யானை இதுவரை 18 பேரை கொன்றுள்ளது. மீண்டும் அரி கொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரி கொம்பன் யானையை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
The tusker named "Ari Komban" that was translocated from Chinnakanal in Kerala's Idukki district to the Periyar Tiger Reserve is now entering the town of Kambam, Tamil Nadu and it damages vehicles and attacks one person.#theni #elephants #TamilNadu #WildTamil1 pic.twitter.com/uUEkMDuXCb
— Wildlife Of Tamilnadu (@WildTamil1) May 27, 2023
Arikomban wild elephant entered Cumbum residential area in Theni district. The elephant, which has killed 18 people so far and is rampaging, has again entered the residential area causing tension. #Arikombamelephant #Cumbum #Theni #wildelephant #forestdepartment pic.twitter.com/WRb1ghiuIW
— DT Next (@dt_next) May 27, 2023