பழத்தை கொடுக்காமல் ஏமாற்றிய பெண்ணை தூக்கி அடித்த யானை - வைரலாகும் வீடியோ
பழத்தை கொடுக்காமல் ஏமாற்றிய பெண்ணை தூக்கி அடித்த யானையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெண்ணை தூக்கி அடித்த யானை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் வாழைப்பழத்தை யானைக்கு உணவு கொடுப்பதற்காக கையை நீட்டினாள். பெண்ணின் கையில் இருந்த பழத்தைப் பார்த்ததும் யானை அப்பெண்ணிடம் நெருங்கி வந்தது. ஆனால், அந்தப் பெண்ணோ பழத்தை கொடுப்பதுபோல் கொடுத்து யானையை ஏமாற்றிக்கொண்டிருந்தாள். இதனால், ஒரு கட்டத்தில் ஏமாற்றம் அடைந்த யானை திடீரென்று அப்பெண்ணை தன் தும்பிக்கையால் தூக்கி அடித்தது.
தற்போது, இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Elephant wasn't playing with her ? pic.twitter.com/UQsoySl84B
— More Crazy Clips (@MoreCrazyClips) April 18, 2023