யானை தும்பிக்கை பிடியில் சிக்கிய மகன் - ஒரு நொடியில் உயிரை காப்பாற்றிய தந்தை - வைரலாகும் வீடியோ
யானையின் தும்பிக்கை பிடியில் சிக்கிய மகனை ஒரு நொடியில் உயிரை காப்பாற்றிய தந்தையின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மகனின் உயிரை காப்பாற்றிய தந்தை
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும்.
குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன. குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
அதேபோல், தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தந்தையுடன் சிறுவனான மகன் யானைக்கு பழம் கொடுக்க சென்றான். அப்போது, யானை அருகில் சென்ற சிறுவன் கையில் பழத்தை நீட்டினான். அதை வாங்கிய யானை திடீரென்று தன் தும்பிக்கையால் சிறுவனை மடக்கி இழுத்து தாக்கியது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை தன் மகனை மீட்க முயற்சி செய்தார். ஒரு வழியாக யானை பிடியிலிருந்து அதிர்ஷ்டவசமாக மகனை காப்பாற்றினார் தந்தை. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
This Kerala muslim fellow tried to give meat to the elephant. See what happened. Are these fellows born with sense or are they trying to convert even animals to islam? ???(Their Arrogance ?) pic.twitter.com/SuSf7xd51p
— M. S. Srinivasa Rao (@macharajarao) June 9, 2023