ஓட்டல் சுவையில் முட்டை கொத்து பரோட்டா செய்வது எப்படி?
முட்டை கொத்து பரோட்டா அசைவப் பிரியர்களின் விருப்ப உணவாகும்.
பரோட்டா கடைகளில் முட்டை கொத்து பரோட்டா தயார் செய்வதை பரோட்டாவை கொத்தும் சத்தத்தை வைத்து தூரத்திலிருந்தே அடையாளம் காணலாம்.
வீட்டிலும் இதனை தயார் செய்து குழந்தைகளைக் குஷிப் படுத்தலாம்.
முட்டை கொத்து பரோட்டா செய்வது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பரோட்டா 4 எண்ணம்
- முட்டை 2 எண்ணம்
- பெரிய வெங்காயம் 2 எண்ணம் (பெரியது)
- தக்காளி 2 எண்ணம் (நடுத்தரமானது)
- முந்திரிப் பருப்பு 8 எண்ணம்
- மிளகு சீரகப் பொடி 1 ஸ்பூன்
- கரம் மசாலாப் பொடி 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி இலை
- தேவையான அளவு
- கறிவேப்பிலை 1 கீற்று
- பரோட்டா சால்னா தேவையான அளவு
தாளிக்க
- நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்
- சீரகம் – 1/2 ஸ்பூன்
முட்டை கொத்து பரோட்டா செய்முறை
பரோட்டாவை மிகவும் சிறிதாக பிய்த்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாயகன்ற வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை மற்றும் முந்திரியைச் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடிப் பதத்திற்கு வதங்கியதும் அதனுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு மசிந்ததும் மிளகு, சீரகப் பொடியைச் சேர்த்து ஒருநிமிடம் வதக்கி அதனுடன் கரம் மசாலாப் பொடியைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
அதன் பின்னர் இரண்டு முட்டைகளை உடைத்து கலவையில் ஊற்றி நன்கு கிளறவும். முட்டை சுருண்டதும் அதில் 3 குழிக்கரண்டி அளவு பரோட்டா சால்னாவைச் சேர்த்து நன்கு கிளறவும்.
2 நிமிடங்கள் கழித்து பிய்த்து வைத்துள்ள பரோட்டாக்களை அதில் சேர்த்து நன்கு வதக்கவும்.
சால்னாக் கலவை பரோட்டாத் துண்டுகளுடன் சேர்ந்து நன்கு சுருண்டதும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கி விடவும்.
சுவையான முட்டை கொத்து பரோட்டா தயார்.
தயிர் பச்சடியுடன் சேர்த்து இதனை உண்ணலாம்.