குழந்தைகள் விரும்பி சாப்பிடும் முட்டை சீஸ் ரோல்.. 10 நிமிடத்தில் தயாரிப்பது எப்படி?
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் சீஸ் என்பது அதிகமாக சேர்க்கப்பட்டு வருகின்றது.
மேலும் முட்டையும் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவாக இருக்கின்றது. அதிகமான சத்துக்களைக் கொண்ட முட்டை மற்றும் சீஸ் இவற்றினைச் சேர்த்து சீஸ் ரோல் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
உப்பு - தேவையான அளவு
சிவப்பு மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
பிரெட் துண்டுகள் - 3
வெண்ணெய் - 3 தேக்கரண்டி
சாண்ட்விச் சீஸ் - 3
செய்முறை :
முதலில் பாத்திரத்தில் முட்டையை உடைத்துக் கொள்ளவும். பின்பு முட்டையின் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகாய் பொடி போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.
இதனுடன் மல்லிதழையும் சேர்த்துக் கொள்ளலாம். தொடர்ந்து பிரட் துண்டினை எடுத்து அதின் நான்கு ஓரங்களையும் வெட்டி எடுத்துவிட்டு அதனை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சீஸில் தடவி வைக்கவும்.
அடுத்து அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து வெண்ணெய் தடவி சூடானதும் அதில் நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி அதன் மீது சீஸ் வைத்த பிரட்டை உள்ளே வைத்து, முட்டை கலவை சுற்றி நன்றாக விட்டு வேக விடவும்.
முட்டை மற்றும் பிரெட் நன்றாக வெந்தவுடன் எடுத்து குழந்தைகளுக்கு சூடாக பரிமாறினால் சுவையான Egg Cheese Ball தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |