ரிச் ஓட்டல் சுவையில் முட்டை சப்பாத்தி ரோல்... எப்படி செய்வது தெரியுமா?
இன்று பலரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை.
நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன.
இத்தனைய சத்தான முட்டையை வைத்து முட்டை சப்பாத்தி ரோல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முட்டை – 1
- சப்பாத்தி – 6
- பெரிய வெங்காயம் – 3
- பச்சை மிளகாய் – 1
- கறிவேப்பிலை – சிறிது
- எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கி வைக்கவும்.
அடுத்து செய்து வைத்துள்ள சப்பாத்தியில் இந்த முட்டை பொரியலை நடுவில் சிறிது வைத்து சுருட்டவும்.
இப்போது சுவையான முட்டை ரோல் ரெடி. குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.