பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ செய்ய தெரியுமா? இந்த பொருளை மட்டும் சேர்க்காதீங்க!
பொதுவாக குழந்தைகளுக்கு முட்டை என்றாலே மிகவும் பிடிக்கும்.
முட்டையில் அதிகளவு புரோட்டின் இருப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கின்றது.
இந்த முட்டையை வைத்து நிறைய வகையான உணவுகள் செய்யலாம்.
அந்த வகையில் முட்டையை வைத்து பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ எப்படி செய்வது என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 3
வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 10
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு கரைத்த தண்ணீர்- தேவையான அளவு
எலுமிச்சை தண்ணீர்- தேவையான அளவு(எலுமிச்சை சாறு + தண்ணீர்)
புளி தண்ணீர்- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தயாரிப்பு முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு முட்டைகளை அதில் போட்டு அவித்து எடுக்க வேண்டும்.
பின்னர் பர்மா ஸ்டைல் செய்வதற்கு தேவையான காய்கறிகளை நறுக்கி கொள்ள வேண்டும். ( வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி) இதனை தொடர்ந்து அடுப்பில் ஒரு பாத்திரம் ஊற்றி அதில் வெங்காயத்துடன் நாம் வெட்டி வைத்திருந்த காய்கறிகளை போட்டு வதக்கி எடுக்கவும்.
வதக்கும் போது வெங்காயம் பொன்னிறமாக இருந்தால் சரியான பதம். இதனுடன் பூண்டையும் சேர்த்து பொறித்தெடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் காய்ந்த மிளகாயை போட்டு நன்றாக அரைத்து கொள்ளல் அவசியம்.
பொறித்த பூண்டு, வதக்கி வைத்திருக்கும் வெங்காயத்தில் போட்டு கலந்து கொள்ளவும். அவித்த முட்டையை நான்காக பிளந்து அதிலுள்ளே வெங்காயத்தை வைக்க வேண்டும்.
அதற்கு மேல் எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். இவ்வாறு செய்வதால் சூப்பரான பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ தயாரி!