அதிகாலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்க? இந்த பிரச்சனைகள் வரலாம்
என்ன தான் பிரச்சனைகள் வந்தாலும் சிலர் டீ குடிப்பதற்கு அடிமைகளாக உள்ளார்கள். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக தினமும் 5 முதல் 6 கோப்பைகள் வரை டீ குடிப்பவர்களும் உண்டு.
டீயில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்திகள் காணப்பட்டாலும் அதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க கூடாது.
அந்த வகையில் அதிகாலையில் டீ குடித்தால் உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிகாலை டீ
1. காலையில் எழுந்தவுடன் சூடான ஒரு கப் டீ கடிக்கும் போது இதமாக இருந்தாலும், அதிலுள்ள காபின் உங்களுக்கு அதிக வலியை தரக்கூடும். இதனால் தலைவலி வரும். இதனை தடுக்க இரவு உறங்கும் முன் நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.
2. டீயில் அதிகளவு டையூரிடிக் கூறுகள் இருப்பதால் அது வயிற்றில் செரிமானப்பிரச்சனையை உருவாக்கும். இது சிறுநீர் கழிக்கும் செயன்முறையில் கஸ்டத்தை உண்டாக்கும். இதனால் உடலில் நீரிழப்பு உண்டாகும்.
3.தேனீரில் டானின் என்ற ஒரு தனிமம் உள்ளதால் இது உணவில் இருக்கும் இரும்புச்சத்தை உறிஞ்ச விடாது.
அதேபோல் இதில் இருக்கம் காபினும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்தை உறிஞ்சுவதை தடை செய்யும். இதனால் அசிடிட்டி உருவாகும். எனவே வெறும் வயிற்றில் டீ குடிப்பது நல்லது அல்ல.