சவப்பெட்டியில் கேட்ட சத்தம்: இரண்டு நாட்களுக்கு முன் உயிரிழந்த பெண் மீண்டெழுந்த அதிர்ச்சி சம்பவம்
இறந்து விட்டார் என்று இறுதிசடங்கிற்கு ஆயத்தமான போது திடீரென சவப்பெட்டியில் இருந்து எழுந்த பெண் தொடர்பான செய்திதான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
சவப்பெட்டிக்குள் சத்தம் ஈக்குவடோர் நாட்டில் பெல்லா மொன்டோயா என்ற 76 வயதான வயயோதிபப் பெண் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளார்.
குறித்தப் பெண் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையில் அறிவித்து அவருக்கு மரணச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கிற்காக வைக்கப்பட்டிருந்தது.
அப்போது தான் அந்த சவப்பெட்டிக்குள் இருந்து யாரோ தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இதனைக் கேட்டவர்கள் பேய், பிசாசு என அதிர்ச்சியில் உறைந்துப் போனார்கள்.
சில நேரத்திற்குப் பிறகு உற்றார்கள் அந்த சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதிர்ந்துப்போயிருக்கிறார். ஏனெனில் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட வயோதிபப் பெண் பெட்டிற்குள் இருந்து மூச்சு விட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்திருக்கிறார்.
இதனைப் பார்த்த அயலவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |