தக்காளி அதிகம் சாப்பிட்டால் பிரச்சனை வருமா? மக்களே உஷார்!
தமிழகத்தில் தற்போது தக்காளியின் விலை எகிறிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த தக்காளியை நாம் அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் பல பிரச்சனைகள் நம் உடலில் ஏற்படும்.
நம்முடைய உணவு முறையில் வெங்காயமும், தக்காளியும் அத்தியாவசியமான ஒன்று. தக்காளி காய்கறி வகையைச் சேர்ந்தது என்று தான் நாம் நினைத்திருப்போம். ஆனால் அது, சேர்ரி வகையைச் சேர்ந்தது.
தக்காளியின் பலன்கள்:
ஒவ்வொரு காய்கறிகளுக்கும் பல நல்ல குணங்கள் இருக்கும். அதுபோல தான் தக்காளிக்கும். இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி1, வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி6, வைட்டமின் பி7 மற்றும் வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. தக்காளி சாப்பிட்டால் பல நன்மைகள் அளிக்கும்.
அதுமட்டுமில்லாமல், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் தக்காளியில் அதிக அளவில் அடங்கியுள்ளது.
தக்காளியின் தீமைகள்:
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான். அதே போல, தக்காளியையும் நாம் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் பல பிரச்சனைகள் ஏற்படும்.
தக்காளியில் அதிகளவில் அமிலத்தன்மை உள்ளது. தக்காளியில் ஊட்டச்சத்து இருந்தாலும் கூட, அளவுக்கு மீறி தக்காளியை எடுத்துக் கொண்டால் அமிலத்தன்மை நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
செரிமான பிரச்சனை மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தக்காளியை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. தக்காளியில் அதிகளவு பொட்டாசியம் உள்ளதால் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தக்காளியை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
குடல் அலர்ஜி உடையவர்கள் மற்றும் ஒவ்வாமை பிரச்சனை உடையவர்கள் தக்காளியை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் தோல் அரிப்பும் கூட ஏற்படலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |